கமல் ஹாசனை களமிறக்கும் தொகுதி - மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

இதற்காக 12 பாராளுமன்ற தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்து, அதில் ஒரு தொகுதியில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்த 12 தொகுதிகளுக்குள் தென் சென்னை, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் முதல் இடத்திலும் மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 12 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசனை களமிறங்க வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதனை அடுத்து, கமல் கட்சியினர் கோவை தொகுதியில் 'மக்களோடு மய்யம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள். 

இந்த பணிகள் அடுத்ததாக தென்சென்னை, மதுரை தொகுதிகளிலும், பின்னர் மற்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், பாராளுமன்ற தேர்தலுக்குள் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது என்பதை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hasan parliament election constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->