ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கிய கமல்ஹாசன்!  - Seithipunal
Seithipunal


கோவை மாநகரத்தின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா. அண்மையில் ஷர்மிளாவை நேரில் சந்தித்து 
வாழ்த்திய திமுக எம்பி கனிமொழி, அந்த பேருந்திலேயே சிறிது தூரம் பயணம் செய்தார்.

அப்போது கனிமொழியிடம் பயிற்சி நடத்துனர் டிக்கெட் கேட்க, இதனால் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஷர்மிளா தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, தமிழக அரசு தனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில், ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக நடிகர் கமலஹாசன் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் தெரிவிக்கையில், 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.  

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.  

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhaasan gift a Car to lady driver sharmila


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->