#மதுரை : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது
Kamaraj University professor arrested for sexually harassing female students in madurai
மதுரை மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (60). இவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கருப்பையா உளவியல் துறை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரையடுத்து ஐசிசி கமிட்டி இது குறித்து விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து கருப்பையா மீது கடந்த ஒரு மாதமாக பல்கலை நிர்வாகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் வந்துள்ளது. மேலும் முதுகலை மாணவி ஒருவருக்கு இமெயில் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தென் மண்டல ஐஜியிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் மகளிர் காவல் துறையினர், நேற்று பேராசிரியர் கருப்பையாவை கைது செய்தனர்.
English Summary
Kamaraj University professor arrested for sexually harassing female students in madurai