காஞ்சிபுரம்|| தடுப்பணைகளைத் தாண்டிச் செல்லும் வெள்ள நீர்; மகிழ்ச்சியில் விவசாயிகள்! - Seithipunal
Seithipunal


தொடர் நீர்வரத்து காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசீவரம் மற்றும் மாகரல் தடுப்பணைகள் நிரம்பி வழிந்து உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து  லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 16 நாட்களில் மட்டும் 1228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், கடந்த 10 நாட்களாக மீண்டும் மழை பெய்யத் துவங்கியதால் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசீவரம் மற்றும் மாகரல் தடுப்பணைகள் நிரம்பி வழிந்து உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.

மேலும், பாலாறு மற்றும் செய்யாறுகளில் மீண்டும் நீர் சென்று கொண்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram district barrages full Farmers happy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->