காஞ்சிபுரம் | ஓசியில் சாப்பாடு கேட்ட தொழிலாளி - ஆத்திரமடைந்த ஊழியரின் ஆவேச செயல்!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 50) இவர் கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் அடிக்கடி சாப்பிடுவது பழக்கம். 

இந்நிலையில் திருமலை உணவகத்திற்கு சென்று இலவசமாக சாப்பாடு தரும்படி அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் பலமுறை தகராறு ஏற்பட்டு வந்தது. 

அதேபோல் நேற்று மாலை திருமலை உணவகத்திற்கு சென்று இலவசமாக சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டு வந்ததால் உணவகத்தில் வேலை பார்த்து வந்த ராமச்சந்திரன் (வயது 40) என்பவர் கண்டித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் அருகில் இருந்த கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த திருமலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவகத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து உடனடியாக சென்று விட்டனர். 

பின்னர் கொலை செய்த ராமச்சந்திரன் தப்பி ஓடி விட்டார். இது குறித்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அதே பகுதியில் தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Worker asked OC food beaten death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->