#JUSTIN || "வேறு வேலை ஏற்பாடு செய்கிறேன்".. ஷர்மிளாவுக்கு உறுதியளித்த கனிமொழி MP..!!
Kanimozhi assures arrange another job for Sharmila
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக்கூடிய தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். அந்த பகுதியில் பிரபலமான இவரை பல அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஷர்மிளா இயக்கி வரும் தனியார் பேருந்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி இன்று பயணம் செய்தார். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த போது பயிற்சி நடத்தினருக்கும் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பயிற்சி நடத்தினர் பேருந்து நிறுவனத்தின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுனர் ஷர்மிளா நேரடியாக பேருந்து நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்து வேலைக்கு வரவில்லை எனக் கூறியதோடு தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் நான் சர்மிளாவை வேலை விட்டு நீக்கவில்லை எனவும் அவர் தேவைப்பட்டால் வேலைக்கு வரலாம் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சிப்பெண் நடத்துனர் பலமுறை அவரிடம் மன்னிப்பு கேட்டும் அவர் வேலை விட்டு சென்றதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தன்னை பேருந்து நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி விட்டதாக அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் ஓட்டுனர் ஷர்மிளா கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளாவுக்கு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
English Summary
Kanimozhi assures arrange another job for Sharmila