ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி.! ஆதாரத்தை காட்டுங்க.! கனிமொழியின் சுளீர் கேள்வி..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுப்புற சூழல் மாசடைவதாகவும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100வது நாள் போராட்டத்தின் பொழுது போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமூகவிரோதிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்த கலவரத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு சமர்ப்பிரத்த அறிக்கையின் படி துப்பாக்கி சூட்டிற்கு காவல் துறையே முழு காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி இந்திய குடிமை பணி தேர்வர்களுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர். இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலை தற்பொழுது மூடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது" என பேசி இருந்தார். ஆளுநர் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தன்னுடைய ஆதாரங்களை ஆளுநர் தர வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆளுநரின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi condemns Governor comment on Sterlite plant protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->