#காஞ்சிபுரம் | மாமூல் கேட்டு ரவுடி அராஜகம்! வெளியான சிசிடிவி காட்சிகள்! - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புதூரில் கடைகள் மற்றும் உணவகங்களில் மாமூல் கேட்டு பிரபல ரவுடி மிரட்டி  வருவதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவன் அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வளம் வருவதாக தெரிகிறது.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் கடைகள் மற்றும் உணவகங்களில் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

ரவுடி அருண் மாமூல் கேட்டு அராஜகம் செய்வது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் வாங்க மறுப்பதாக அந்த பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த நிலையில், தனியார் உணவகம் ஒன்றில் நுழைந்த ரவுடி அருண் மாமூல் கேட்டு, உணவாக ஊழியரை தாக்கி உள்ளார்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடை ஊழியரை ரவுடி அருண் கன்னத்தில் அறையும் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

அராஜகம் செய்துவரும் ரவுடி அருண் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kANJIPURAM rOWDY aRUN cctv


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->