#தமிழகம் || கொடூரம் - நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்.! உடல்கருகி பலியான உயிர்கள்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு லாரி  தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே : பெங்களூரில் இருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், காங்கேயத்தில் இருந்து எதிர்திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி மட்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 3 பேர் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மூன்று பேரையும் மீட்டனர்.

இதில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kankeyam two lorry accident may


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->