சென்னை வாசிகளே., தமிழக மக்களே., தப்பி தவறிகூட நாளை அந்த பக்கம் போய்டாதீங்க.!  - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் யாரும் தப்பித்தவறி கூட சென்றுவிட வேண்டாம் என்று மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது படி காணும் பொங்கலன்று கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூடுதல் போலீசார் நாளை கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

முடிந்த வரை பொதுமக்கள் யாரும் நாளை வீட்டை விட்டு வெளியே வராமல், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

நாளை சென்னை மெரினா கடற்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே எந்த கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அனைத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளிய வர வேண்டுமெனவும், தேவையில்லாமல் சுற்றினால், வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanum pongal lock down jan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->