#காரைக்கால் : நாளை முதல் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! 144 தடை உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலரும் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெரும் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று, இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், காலரா பரவல் காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு காரைக்காலில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARAIKAL 3 DAY SCHOOL LEAVE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->