#தமிழகம் ||  மாமூல் கேட்டு கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.! அராஜகத்தில் ஈடுபட்ட ஆசாமிகள்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை பகுதியின் கடைவீதியில் உள்ள கடைகளில், அரிவாளுடன் புகுந்த இளைஞர்கள் சிலர், பணம் கேட்டு மிரட்டி ஒருவரை வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை காந்தி ஜி சாலையில், அரிவாளுடன் வந்த இரண்டு இளைஞர்கள், கடையில் புகுந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது கடையில் இருந்த செந்தில்வேல் என்பவர் பணம் தர மறுத்ததால், அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும், கடை முன்னால் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

வெட்டுப்பட்ட செந்தில்வேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karanthai rowdy atrocitys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->