போலீஸாருக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்காது - காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


போலீசாருக்கு தெரியாமல் கள்ளச்சாரய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்  சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை.

ஏற்கனவே தெரியாமல் இருந்திருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 1500 பேரை கைது செய்திருக்க முடியாது. முதலமைச்சரும் போலீசாரும் கள்ளச்சாரத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாரத்தை குறித்து உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது என்றும் மற்றவர்கள் வெற்றி பெற்றால் பிரிவினைவாதம் ஜெயித்தது என்றும் கூறுவது அபத்தமான கருத்து. கர்நாடகாவில் உள்ளாட்சிக்கும் பிரிவினைவாத அரசியலுக்கும் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதனை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை போல் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி. தேர்தல் நேரத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்யும். அதேபோல் மத்தியில் பாஜக ஆட்சி இனி தேவை இல்லை என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthik chidambaram speech about kallacharam case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->