கருக்கா வினோத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டார் சட்டம் பாய்ந்துள்ளது. கருக்கா வினோத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் அவர் மீது குண்டார் சட்டம் பாய்ந்துள்ளது.

அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே அவர் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்த மறுநாளே ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் கொண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கருக்கா வினோத் ஏற்கனவே மூன்று முறை குண்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 4வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karukka Vinoth Arrested under Gangster Prevention Act


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->