கரூர் புத்தக திருவிழா.. சேரும், சகதியும் சூழ்ந்து.. புத்தகங்கள் வெள்ளத்தில் மிதப்பு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகத் திருவிழா கடந்த 19ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த புத்தகத் திருவிழா நாளை மறுநாள் நிறைவடைய இருந்தது.

இத்தகைய நிலையில், நேற்று கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 3 மணி நேரம் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. எனவே, புத்தகத் திருவிழா அரங்குகளில் மழை நீர் சூழ்ந்தது.  நீண்ட நேரமாக பெய்த மழையின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெற்ற மைதானத்தில் மழைநீர் வெள்ளம் புகுந்து ஏராளமான புத்தகங்கள் நீரில் மூழ்கின.

இரவு நேரம் என்பதால் மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. இன்று அதிகாலை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மழை வெள்ளத்தை வடித்தனர்., புத்தக திருவிழா அரங்கின் முற்பகுதிகளில் சேரும் சகதியும் காணப்பட்டது. நுழைவு வாயிலில் எம்சாண்ட் கொட்டும் பணி நடந்து வருகிறது.

எனவே பள்ளிகளுக்கு மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வர வேண்டாம் என்று தகவல் கொடுக்கப்பட்டது. விடுமுறை நாள் என்ற காரணத்தால் புத்தக திருவிழாவை காண வந்த பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur book fair ruined by rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->