கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இலங்கை அரசு அறிவிப்பு.!
Katcha theevu Anthoniyar festival date announced
இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவானது, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த கச்சத்தீவு முதலில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த நிலையில், பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இந்திய நாட்டின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா - இலங்கை நாட்டை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விழா நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4500 பேருக்கும், இலங்கையில் இருந்து 4500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Katcha theevu Anthoniyar festival date announced