கீழடி அகழ்வாய்வு | கொந்தகை அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கம்?!
Keezhadi mini theater
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் செய்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அதுகுறித்த தகவல்களை காணும் வகையில், கொந்தகை கிராமத்தில் கட்டப்படும் அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கம் கட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை : கீழடி எட்டு கட்ட அகழ்வாய்வு பணிகளும், அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் 3 கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது.
இந்த அகழ்வாய்வில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக, அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கீழடி அகழ்வாய்வில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள், மற்றும் அது குறித்த தகவல்களை திரையிடும் வகையில், மினி திரையரங்கம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீழடி குறித்த அறிய தகவல்களை திரையிடும் வகையில், 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காணும் விதமாக மினி திரையரங்கம் உருவாகிவருவதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும், ஓரிரு வாரங்களில் பணிகள் முடிவடைய உள்ளதாகவும், இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து திறக்க உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.