நான் குற்றமற்றவன்! பாலியல் புகாருக்கு ஆளான பிரபல நடிகர் ஜெயசூர்யா தன்னிலை விளக்கம்! - Seithipunal
Seithipunal


கேரளா திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான பிரபல நடிகர் ஜெயசூர்யா தன்னிலை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், என்னையும், எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் அனைவரையும் இந்த போலியான குற்றச்சாட்டுகள் மிக இயல்பாக சிதைத்து விட்டது.

இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எனது தரப்பு வழக்கறிஞர் குழு கவனித்துக் கொள்ளும்.

மனசாட்சி இல்லாத யாருக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிக எளிது. உண்மையை விட பொய் எப்போதும் வேகமாக பயணிக்கும் ஆனால் இறுதியில் உண்மை வெல்லும் என நம்புகிறேன்.

இது போன்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்ளும் போது தான் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுவது என்பது பாலியல் துன்புறுத்தலைப் போலவே வேதனையானது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

அமெரிக்காவில் என்னுடைய தனிப்பட்ட வேலைகள் முடிந்தவுடன் இந்தியா திரும்புவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடருவேன்.

நமது நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. எனது பிறந்தநாளை வேதனைக்குறியதாக மாற்ற பங்களித்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி.

உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் பாவம் செய்தவர்கள் மீது கல்லெறியட்டும்" என்று நடிகர் ஜெயசூர்யா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Actor Jayasurya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->