அடுத்த பேரிடி! மேலும் ஒரு தமிழர் பலி! வேதனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் நேற்று அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது,

இந்த நிலச்சரவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மண்ணில் புதைந்தது. தற்போது வரை 153 பேர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர்.

இந்த நிலச்சரிவில், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 34) என்பவரும் பலியானார்.

கட்டுமானப் பணிக்காக முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

இதேபோல், வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கல்யாண குமார் என்பவரும் பலியாகினர்.

இந்த நிலையில்,  நிலச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்யாண குமார் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்த கல்யாண குமார் மற்றும் காளிதாஸ் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Vayanadu Land slide kalyana kumar death CM Stalin Condolence


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->