கேரளாவில் இருந்து காய்கறி கழிவுகளுடன் வந்த லாரி - கையும் களவுமாக பிடிபட்ட ஓட்டுநர், கிளீனர்.!
kerala wastage vegetable lorry seized in tamilnadu
கேரளாவில் இருந்து காய்கறி கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையான கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
kerala wastage vegetable lorry seized in tamilnadu