சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று முதல் முழுமையாக சென்னை கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் எந்த நடைமேடையில் எந்த ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் என்பதை தமிழக போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
நடைமேடை எண் வரிசைப்படி,
1) செங்கோட்டை, கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோயில், மார்த்தாண்டம்.
2) திருவனந்தபுரம், தூத்துக்குடி, பாபநாசம், நாகர்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், உடன்குடி, கருங்கல், கன்னியாகுமாரி, குலசேகரம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம்.
3) ஏர்வாடி, ஒப்பிலன், கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, பரமக்குடி, தேவகோட்டை, பொன்னமராவதி, மதுரை.
4) திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், குமுளி, கும்பகோணம், கம்பம், தேனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், மன்னார்குடி.
5) அரியலூர், ஒரத்தநாடு, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, வேளாங்கண்ணி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நன்னிலம், துறையூர், திருவாரூர்.
6) ஈரோடு, ஊட்டி, எர்ணாகுளம், கரூர், குருவாயூர், கோயம்புத்தூர், சேலம், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்.
7) செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, வந்தவாசி, மேல்மலையனூர், போளூர்.
8) திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம்.
9) கடலூர், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், விருதாச்சலம், புதுச்சேரி, வடலூர்.
English Summary
Kilambakkam bus terminal platform list