கிளாம்பாக்கம் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என பெயர் சூட்டல்! ஜுனில் திறப்பு!
Kilambakkam new Bus stand name announce
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடுத்து மிகப்பெரிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிகள் நாட்டப்பட்டுப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதமே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வண்டலூர் : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா காலங்களில் கூட்ட நெரிசலால் அவதிப்படும் தென் மாவட்ட பயணிகள் நிம்மதி அடைவதுடன் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னை மக்களும் நிம்மதி அடைவார்கள்.
English Summary
Kilambakkam new Bus stand name announce