நாளை முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பு தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தமிழக முழுவதும் வெயில் என்று பாராமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை தீர்க்க ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர் மதுரையிலிருந்து காரில் கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார். 

மேலும் அவர் மே 4 ஆம் தேதி வரை அங்கு தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொடைக்கானலில் நாளை முதல் மே 4 ஆம் தேதி வரை ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal banned flying Drones 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->