வலிமை வைப்.. திட்டம்போட்டு பைக்கை திருடிய அஜித் ரசிகர்கள்.! போலீசிடம் பகீர் வாக்குமூலம்.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் யமஹா பைக் ஒன்று கடந்த மார்ச் 10ஆம் தேதி காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து வலிமை படம் பார்த்துவிட்டு அந்த படத்தில் வருவதைப் போல பைக்கை திருட முயற்சித்ததாக கூறியுள்ளனர். 

ஏற்கனவே, இவர்கள் இருவரும் சேர்ந்து 11 பைக்குகளை திருடி விற்பனை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஜீவானந்தம் திருப்பூர் மாவட்ட பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு குற்றம் புரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai chil snaping bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->