கோவை: முதலவர் ஸ்டாலினின் மேடையில் கொங்கு ஈஸ்வரன் செய்த சம்பவம்!
kovai DMK Function Kongu Eshwaran Speech
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 40க்கு 40 வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ளது.
இந்த விழாவில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு இன்னும் சற்று நேரத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
முன்னதாக திமுகவின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் இந்த விழாவில் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த விழாவில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் எம்எல்ஏ ஈஸ்வர, கொங்கு மண்டலத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும், மாசுபடும் காற்றை சுத்தப்பட வேண்டும் என்றும் மேடையில் வைத்தே முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும் கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் கோரிக்கை வைத்தார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே, கொங்கு மண்டலத்தில் உள்ள குறைகளை கூறி, அதனை நிவர்த்தி செய்வதற்கு உண்டான திட்டத்தையும் கோரிக்கையாக எம்எல்ஏ ஈஸ்வரன் வைத்துள்ளது கூட்டணி காட்சிகளையே அதிர வைத்துள்ளது.
English Summary
kovai DMK Function Kongu Eshwaran Speech