திமுக பிரமுகர்? நாடக காதல், கொலை மிரட்டல்: கோவையில் இளம்பெண் அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal


காதலன் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி, கர்ப்பத்தை கலைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் அந்த இளம் பெண் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் என்னை காதலித்து வந்தார். 

மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, என்னிடம் நெருங்கிப் பழகினார். இதன் காரணமாக நான் மூன்று மாதம் கர்ப்பம் ஆனேன்.

அப்போது விக்னேஷின் பெற்றோர் என்னை அழைத்து, கர்ப்பத்தை கலைத்துவிடு, உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று உறுதி அளித்தனர். 

அவர்களின் வாக்குறுதியை நம்பி நான் கர்ப்பத்தை கலைத்து விட்டேன். ஆனால் விக்னேஷின் பெற்றோர் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். 

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நான் போத்தனூர் மகளிர் காவல் நிலையம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால் விக்னேஷ் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் விக்னேஷ் திமுகவை சேர்ந்தவர் என்பதால் எனது புகாரை போலீசார் எடுக்க மறுக்கின்றனர். இது குறித்து தற்போது நான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அந்த இளம் பெண், விக்னேஷ் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை மீண்டும் அவரின் ஆசைக்கு இணங்க வேண்டும், அப்படி இல்லை என்றால் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை, தனிமையில் இருந்த போது எடுத்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் கண்ணீர் மல்க அந்த இளம் பெண் அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை சற்று பதற வைத்தது.

மேலும் அந்தப் பெண் அளித்த பேட்டியில், விக்னேஷ் மற்றும் அவர்களின் குடும்பத்தார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Drama lover Young lady complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->