தமிழகம் | வாகன ஓட்டிகள் உஷார் - 500 வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட 350 செல்போன்களை உரியவர்களிடம் காவல் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், வழங்கினார். 

இதன் பின்னர் அவர் தெரிவித்துள்ளதாவது,

"கோவை மாவட்டத்தில பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிளான 350 சொல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.போக்சோ வழக்குகளில் 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


 
கோவையில் குட்கா விற்பனை தொடர்பாக 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் வழக்குகளில் 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 2019-2022 வரையில் நடந்த சாலை விபத்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தி 740 பேர் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது". என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai driving license issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->