#கோவை || பெண் மீது ஆசிட் வீச்சு சம்பவத்தில் திடீர் திருப்பம்: கணவனின் நண்பனின் மாமனார் கைது.! தலைசுற்றும் கள்ளக்காதல்.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த அதிர்ச்சி உண்மைகள் தற்போது வெளியாகி உள்ளன. குறிப்பாக அந்தபெண்ணின் கணவரின் நண்பரின் மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் - ராதா தம்பதியினர், கோவையில் தங்கி கட்டிட பணிகளை செய்து வந்துள்ளனர். அப்போது ஸ்டாலினுக்கும் கட்டிட வேலை செய்ய வந்த சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டாலினுக்கும் அவரின் மனைவி ராதாவுக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், ராதா கணவரை விட்டு பிரிந்து, தனியாக கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராதா மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு பொதுமக்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், தற்போது உண்மை வெளிவந்துள்ளது.

ராதா மீது ஆசிட் வீசியது ஸ்டாலினின் நண்பரான சந்திரசேகரின் மாமனார் இளங்கோ தான் என்பது போலீசாரின் தெரியவந்துள்ளது.

மேலும், ராதாவுடன் சந்திரசேகர் பழகி வந்ததால் (கள்ளக்காதல் என்று சொல்லப்படுகிறது) தனது மகளை தனது மகளை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில், ராதா மீது இளங்கோவன் ஆசிட் வீசியது உறுதியானது.

சம்மாவாம் நடந்த அன்று யாரும் இல்லாத நேரம் பார்த்து, திட்டமிட்டு ராதாவை பின்தொடர்ந்து சென்று, அவர் மீது ஆசிட்டை வீசியதாக இளங்கோவன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் இளங்கோவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI illegal Affair issue Acid throw Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->