"இசை வந்தது தான் தெரியும்.. அப்படியே ஆட ஆரம்பிச்சேன் பாரு".. அரசு பேருந்தில் ஆட்டம் போட்ட பாடி.!  - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு கோவையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. 

அப்பொழுது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் இருந்து நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் எனும் பாடல் பேருந்தில் ஒலித்தது. 

இந்த பாடலின் இசை ஆரம்பித்த உடனேயே பேருந்தில் பயணித்த ஒரு மூதாட்டி படு குஷியில் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியவாறு உற்சாகத்துடன் நடனமாட துவங்கினார். 

அப்பொழுது பேருந்தில் இருந்த சக பயணிகள் மூதாட்டியின் நடனத்தை கண்டு ரசித்ததுடன் தங்களுடைய செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர். 

அந்த வீடியோவை சக பயணி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அந்த மூதாட்டி சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாகிவிட்டார். அவரது வீடியோ பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai old women dance in pollachi bus for mandhoppil ninrirundhen song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->