குப்பை கொட்டினால் அபராதம்.. அதை வீடீயோ எடுத்தால் சன்மானம்.. பெண் ஊராட்சி மன்ற தலைவரின் சூப்பர் திட்டம்.!
Kovai panjayath president makes Good Decision
கோவை மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சியின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ₹.1000 ரூபாய் அபராதம் என்றும், குப்பை கொட்டும் நபர்களை ஆதாரத்துடன் காட்டிக் கொடுக்கும் பட்சத்தில் ரூ.500 ரூபாய் சன்மானம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை காட்டம்பட்டி ஊராட்சியின் பொது இடங்களில் மக்கள் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஊராட்சி மன்றத்தலைவரான காயத்ரி பாலகிருஷ்ணன் என்பவர் வித்தியாசமான முறையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.
![](https://img.seithipunal.com/media/kuppai thooti.jpg)
அதன்படி, பொது இடங்களில் குப்பை கொட்டும்பட்சத்தில், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அப்படி குப்பை கொட்டுபவர்களை யாராவது வீடியோ படம் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்ற ஒரு நூதன முயற்சியினால் அப்பகுதியானது தூய்மையான இடமாக தற்போது காட்சியளிக்கின்றது. 4 வார்டுகளில் மட்டுமே முதற்கட்டமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது, இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் மேலும் ஒத்துழைப்பு கொடுத்தால் அனைத்து வார்டுகளிலும் இந்த தூய்மைப்பணி துவங்கும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Kovai panjayath president makes Good Decision