கோவில்பட்டி பட்டாசு ஆலை தீ விபத்து.. தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!
Kovilpatti crackers factory fire cm relief announced
கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் உள்ள பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை தீ விபத்தில் நேற்று சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி அவர்களின் மகன் ராமர் மற்றும் பொய்யாமொழி அவர்களின் மகன் தங்கவேல் தொட்டம்பட்டி பசுவந்தனையைச் சேர்ந்த குட்டையன் அவர்களின் மகன் ஜெயராஜ் நாலாட்டின்பதூரைச் சேர்ந்த வெள்ளச்சாமி அவர்களின் மகன் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Kovilpatti crackers factory fire cm relief announced