வணிகர் தினம்: நாளை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடல்..! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் தினசரி இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் இங்கிருந்து காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்களும், பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில், வணிகர் தினத்தையொட்டி, நாளை சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதனால்.கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மொத்த-சில்லறை விற்பனை கடைகள் நாளை மூடப்படுகின்றன. மேலும் பூ மற்றும் பழச்சந்தை வழக்கம்போல இயங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambedu vegetable market will be closed tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->