கிருஷ்ணகிரி வெடி விபத்திற்கு காரணம் என்ன? தொடரும் குழப்பம்!  - Seithipunal
Seithipunal


ஒன்பது பேரின் உயிரை பலி கொண்ட கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்திற்கு காரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பா? அல்லது பட்டாசு வெடிப்பா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐ ஆர்) சிலிண்டர் வெடித்ததே இந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. 

இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், கிருஷ்ணகரியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு கேஸ் சிலிண்டர் காரணம் இல்லை என்றும், தமிழக அரசு இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சட்ட விரோத கல் குவாரிகளுக்கான வெடி மருந்துகளை பதுக்கியதே இந்த வெடி விபத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், பட்டாசு கடை அருகில் உணவு கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தான் இந்த விபத்து ஏற்பட்டதாக  காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளின் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரின் உறவினர்கள்கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

உணவகத்தின் பெண் உரிமையாளர் மகன் தெரிவிக்கையில், எனது தாயாரின் உடலில் சிறு தீக்காயங்கள் கூட இல்லை. அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்கள் உணவகத்தில் உள்ள சிலிண்டர்கள் இரண்டும் முழுமையாக எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே உள்ளது. ஆனால் இவர்கள் சிலிண்டர் வெடித்து தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பொய் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Fire Accident issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->