மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்! 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ககுழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி திடீர் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளால் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.

இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 13ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிகள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மின் உற்பத்தி செய்து கொண்டிருந்தபோது திடீரென பழுது காரணமாக மின் உறுதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 57 நாட்களுக்குப் பிறகு நேற்று மின் உற்பத்தில் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று காலை மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில்  அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kudankulam Second Nuclear Reactor Sudden Shutdown Due To Pipe Repair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->