தறிகெட்டு ஓடி வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து: பயணிகளின் கதி என்ன?
Kumbakonam govt bus overturns accident
தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து அய்யம்பேட்டை பகுதியில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (வயது 50) என்பவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மேலும் இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Kumbakonam govt bus overturns accident