சாவிலும் அரசியல் ஆதாயமா... எடப்பாடியை வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal



சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரகுபதி, திருவெண்ணைநல்லூரில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போல் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

உயிரிழந்த ஜெயராமனுக்கு அளவுக்கு அதிகமாக மது பழக்கம் இருப்பதால் புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இந்த சம்பவத்தை கள்ளச்சாராயம் மரணம் என தெரிவித்து இறப்பிலும் அரசியல் ஆதாயத்தை எடப்பாடி பழனிச்சாமி தேடுகிறார். ஜெயராமன் உடல்நலம் சரியில்லாமல் கடந்த இரண்டு நாட்களாக உணவு சாப்பிடாமல் தொடர்ந்து மது அருந்தி கொண்டே இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.

தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Law minister says EPS death seeking political


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->