ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை.!
law student sucide for money loss in online crypto currency
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் கவுதமன். இவர் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது கவுதமனுக்கு கிரிப்டோ கரன்சி என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது.
இதன் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஊரில் வந்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இதில் கவுதமன் தன்னிடம் இருந்த பணத்தை முதலீடு செய்து இருந்தார். அதுமட்டுமல்லாமல், தன் நண்பர்களிடமும் பணத்தை கடனாகப் பெற்று முதலீடு செய்துள்ளார்.
இதற்கிடையே கவுதமனுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கவுதமன் வாயில் நுரை தள்ளிய நிலையில் நேற்று மாலை வீட்டில் அவரது அறையில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவுதமனின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவுதமன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
law student sucide for money loss in online crypto currency