மத அடிப்படை வாத இயக்கங்களோடு அரசியல் உறவு வைத்திருக்கும் முதல்வர்.! அனைத்தையும் போட்டுடைத்த இந்து முன்னணி தலைவர் .!
Leader of the Hindu Front arjune sambath
கோவை மாநகரில் கடந்த 23ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ''இந்த சம்பவத்தை பாஜகவை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இதை கண்டிக்கவில்லை. ஏன் முதலமைச்சர் கூட கண்டிக்கவில்லை. அதேபோல் சம்பவம் நடந்த இடத்தை எந்த அரசியல் கட்சித் தலைவரும் வந்து பார்வையிடவில்லை. இதுவே பிற மதம் சார்ந்தவர்களுடைய ஒரு வழிபாட்டுத் தளத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்திருந்தால் இந்நேரம் அனைத்துக் கட்சிக்காரர்களும் ஓடி வந்திருப்பார்கள்.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 15 மாத காலமாக நடைபெறும் திமுக ஆட்சி சிறுபான்மை ஆதரவு என்கிற பெயரில் மத அடிப்படை வாத இயக்கங்களோடு தனது அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இந்துக்களை விமர்சனம் செய்தும், ஆபாசமாகவும் ஆ.ராசா போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் கடவுளையும் விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் இனிமேலாவது தன்னுடைய அணுகுமுறை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்க கூடாது'' என்றுத் தெரிவித்தார்.
English Summary
Leader of the Hindu Front arjune sambath