எலுமிச்சை நறுமணம் வீசும் மிளகு...பெண் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு!
Lemon scented pepper Woman scientist makes amazing discovery
எலுமிச்சை சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி புதுச்சேரி பெண் விஞ்ஞானி அசத்தியுள்ளார்.
ஆராய்ச்சியின் மூலம் கனகாம்பரம் பூவில் பல 100 வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர்புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. இதற்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை கவுரவித்தது. இந்தநிலையில் எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 32) இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கியதுடன் ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கிய ஸ்ரீலட்சுமி காய்க்காத மிளகு செடிகளை காய்க்க வைப்பதற்காக இயற்கை முறையிலான கரைசல் ஊக்கியை கண்டுபிடித்தார். மேலும் தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார்.
இது குறித்து இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி, கூறியதாவது:- பொதுவாக மிளகு இனத்தில் நட்ட 7-வது ஆண்டில் தான் மகசூல் கிடைக்கும் என்றும் அதுவும் 25 அடியை தொட வேண்டும் என்றும் ஆனால், நான் கண்டுபிடித்துள்ள மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது. 15 அடியே போதுமானது என தெரிவித்துள்ளார் .
மேலும் இப்போது அதேபோன்று 15 அடியில் விளைச்சல் தர கூடிய புதிய மிளகு இனத்தை கண்டுபிடித்துள்ளேன் என்று கூறிய ஸ்ரீலட்சுமி இதனுடைய காய்கள், இலைகளை சுவைத்தால் எலுமிச்சை நறுமணம் வரும் என்றும் காரமும் சாதாரண மிளகு இனத்தை காட்டிலும் அதிக காரம் இருக்கும் என்றும் சூரிய கதிர்வீச்சினால் மாற்றம் ஏற்பட்டு, இதனை கண்டுபிடித்துள்ளேன் என்றார்.
English Summary
Lemon scented pepper Woman scientist makes amazing discovery