நாதக பிரிவினைவாத இயக்கம்!மோதுவோம் என்றாகிவிட்டது... வா மோதுவோம்...வருண்குமார் ஐபிஎஸ்-க்கு பகிரங்க சீமான் சவால்!
Let fight Let fight Varunkumar challenges IPS to Varun Kumar Seeman
கோவையில் இன்று நிருபர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சீமான், தனது கட்சி 13 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் தனிப்பெரும் கட்சியாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார். "தேர்தல்களில் 36 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக இருக்கின்றோம். ஆனால், திருச்சி எஸ்.பி. வருண்குமார், எதனை ஆதாரமாக வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என கூறுகிறார்? தமிழ் மற்றும் தமிழர் எனும் அடையாளத்தைப் பிடிக்கிறோம் என்பதுதான் பிரிவினைவாதமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், "அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி அவர் ஐ.பி.எஸ். ஆனார்? வா, மோதுவோம்!" என சவால் விடுத்தார்.
சீமான், நடிகர் விஜய் மக்கள் நலன் குறித்து செயல்படுவதை வரவேற்றார். "நடிகர் விஜய் மக்களுக்கு உதவ முயற்சி செய்கிறார். அதனை குறை சொல்ல முடியாது. நாங்கள் மனநோயாளிகள் இல்லை என்பதாலேயே எப்போதும் குறை கூறும் மனப்பான்மையிலும் இல்லை," என்றார்.
தமிழகத்தில் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் மத்திய அரசு எந்தவித உதவிகளையும் செய்யாதது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். "தமிழகம் செலுத்தும் வரிகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டு, அதே நேரத்தில் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி உதவிகளை உடனடியாக அளிக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு உதவ மறுக்கிறது," என குற்றம்சாட்டினார்.
"இதுபற்றி கேள்வி கேட்டால், 'ஆண்டி இந்தியன்' என தலைப்பிடுகிறார்கள். அது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை," என்றார்.
சீமான், அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததையும் கண்டித்தார். "உணவு மற்றும் உடை என்பது அடிப்படை உரிமை. மாட்டை புனிதமானதெனக் கூறுவோர், அதனை ஏற்றுமதி செய்வதை ஏன் அனுமதிக்கிறார்கள்? 28 சதவீத மக்களுக்கு இரவு உணவை உட்கொள்ள முடியாமல் இருக்கின்றது. மாட்டிறைச்சி தடைக்கு பதிலாக, மக்களின் உணவுரிமையை உறுதி செய்ய வேண்டும்," என்றார்.
சீமான் முன்வைத்த இந்த கருத்துகள், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
English Summary
Let fight Let fight Varunkumar challenges IPS to Varun Kumar Seeman