தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்ய வருவாய் துறை, காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 406 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பானை வழங்கப்படும். அதிக அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு இடங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Licenses of 174 firecracker factories in Tamil Nadu canceled


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->