மினி வேனில் சிக்கிய மதுபாட்டில்கள் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வேனில் மது பாட்டிகள் இருந்ததையடுத்து அதிகாரிகள் அந்த வேனை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மினி வேனை ஓட்டிவந்த ஓட்டுனரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கோவிலஞ்சேரி பகுதியில் உள்ள ஒருவரிடம் சில பொருட்களை கொண்டு சென்று வழங்குமாறு கூறியதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் தான் அதில் மதுபாட்டில்கள் இருப்பது எனக்கே தெரிய வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் ரூ.3 லட்சம் மதிப்புடைய, 1,500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருப்பினும், போலீசார் தமிழக்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் கள்ளச்சந்தையில் விற்பதற்காக இந்தப் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liquor bottles seized in chennai tambaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->