நாகையில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில் ஒன்றான வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். இந்தத் திருவிழா செப்டம்பர் எட்டாம் தேதி வரை கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local holiday to two taluka in nagapatinam district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->