மக்களவை தேர்தல்: தி.மு.க வேட்பாளருக்கான விண்ணப்ப படிவம் விநியோகம்! எப்போது தெரியுமா?
Lok Sabha Elections Distribution application DMK candidate
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
வருகின்ற தேர்தலில் போட்டியிட விரும்ப அவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
வருகின்ற 19ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ. 50000 முதலில் செலுத்திட வேண்டும்.
தி.மு.க வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை ரூ. 2000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Lok Sabha Elections Distribution application DMK candidate