கூட்டம் கூட்டமாக உயிரிழந்த ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள்! கடலூர் அருகே சோகம்!
lots of olive redly tortoise were found dead in cuddalore sea shore
கடலூர் மாவட்டத்தில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூரின் வெள்ளி கடற்கரையில் ஹாலிவுட் ரெட்லி ஆமைகளின் பொறிப்பகம் அமைந்துள்ளது.
கடற்கரை ஓரத்திலிருக்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகளை எடுத்து வந்து அவற்றை பொறிப்பகத்தில் வைத்து பராமரித்து அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளியேறியதும் அவற்றை பாதுகாப்பாக முறைப்படி கடலில் கொண்டு விடப்படும்.

இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையிலுள்ள குறிப்பகத்திலிருந்து வெளியே வந்த ஆமைக்குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்தன. இந்த ஆமைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. ஹாலிவுட் வகை ஆமைகள் உலகில் வேகமாக அழிந்து கொண்டு வரும் ஒரு இனமாகும்.
பல்வேறு உலக நாடுகளும் இந்த ஆமை இனங்களை பாதுகாக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோன்று நமது நாட்டிலும் இந்த ஆமை இனங்களை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடலூரில் இந்த இனத்தின் ஆமை குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்திருப்பது சமூக ஆர்வலர்களை பெரும் சோகத்திலும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது..
English Summary
lots of olive redly tortoise were found dead in cuddalore sea shore