சென்னை உணவு திருவிழா' மாட்டிறைச்சி உணவக அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை - மா.சுப்பிரமணியன்.!
Ma Subramanian speech about Chennai food festival beef issue
சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாள் நடைபெறும் உணவுத் திருவிழா தொடங்கியது. சிங்காரச் சென்னை 2022 உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்.
சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உணவு கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதுவும் கிடையாது.
இதில் ஒரு அரங்கில் கூட பீப் பிரியாணி உணவு இடம்பெறவில்லை இதற்க்கு ஒரு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சென்னை தீவு திடலில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்டபோது பீப் பிரியாணி உணவு விற்பனைக்கு அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை என விளக்கம் அளித்தார். பல வகையான உணவுகள் விழா அரங்கில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ma Subramanian speech about Chennai food festival beef issue