இப்படிலாம் பண்ணீங்க... அந்த நிகழ்ச்சியில் இனி பங்கேற்க மாட்டேன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

அப்போது புதிதாக சீரமைக்கப்பட்ட கருத்தரங்கு மற்றும் இருதவியல் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது,

"அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்  மக்கள் பிரதிநிதிகளுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். மக்கள் பிரதிநிதிகளை கௌரவிக்க, அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு இல்லையென்பதால் பூங்கொத்து மற்றும் சால்வைகளை சிரமமப்பட்டு வாங்குகின்றனர். 

மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பூங்கொத்து வழங்குவது மற்றும் சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும் என 36 மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட வேண்டும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ma subramaniyan say about some rule


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->