கிருஷ்ணகிரி சம்பவம்: பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், "சம்பவம் குறித்து வெளியில் சொல்ல  வேண்டாம் என பள்ளி தரப்பில் கூறியதால் மாணவிகள் புகார் அளிக்கவில்லை. ஒரு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெற்றோரிடம் கூற அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சமூக நலத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது.

பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பிட்டு உள்ளதாக தமிழக அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில் மாணவியின் பெயரைத் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் கூறி அடையாளத்தை அம்பலப்படுத்தி விட்டனர்.

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு மாணவிக்கு எந்த நிவாரணமும் வழங்க வில்லை என்று வாதம் வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், பள்ளிக் கல்வி துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்? பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras HighCourtKrishnagiri incident fake NCC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->