மணல் குவாரி ரெய்டு.. "ED சம்மனுக்கு தடை".!! குஷியில் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு நிர்ணயித்த அளவைவிட குவாரிகளில் மணல் எடுத்து விற்று அந்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை தமிசஹகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரி அதிபர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் சென்னை ராஜ்குமார் ஆனைமுத்து, புதுக்கோட்டை சண்முகம் ராமச்சந்திரன், திண்டுக்கல ரத்தினம் ஆகிய 3 பேர் தனித்தனியே சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் "அமலாக்கத்துறை விசாரணைக்கு அடிப்படையாக உள்ள வழக்கிற்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த 2018 முதல் 2023 வரை 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த வழக்கிலும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களை குற்றம் சாட்டவும் இல்லை. எங்களுக்கு அனுப்பிய சம்மன் தெளிவாக இல்லை. சாட்சியாக அழைக்கின்றனரா? அல்லது சந்தேகத்தின்படி அழைக்கின்றனரா? என்பதை தெரிவிக்கவில்லை. எனவே, எங்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்"என மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madrashc interim Ban Sand Quarry Raid ED Summons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->