திடீர் திருப்பம்.. ED விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.!!
Madrashc stay on Ed investigation
சென்னையில் போர்ஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையில் சுமார் ரூ.150 கோடி வரை பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது தவறு எனவே தங்கள் நிறுவனத்தின் மீது மதிய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் விதித்ததோடு இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Madrashc stay on Ed investigation